சஸ்பெண்ட் நடவடிக்கையை தொடர்ந்து TVK-வில் இணையும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர்

இன்று பிற்பகல் 3 மணிக்கு பனையூரில் உள்ள த.வெ.க.வின் அலுவலகத்தில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சஸ்பெண்ட் நடவடிக்கையை தொடர்ந்து TVK-வில் இணையும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர்
Published on

தமிழக காங்கிரஸ் கட்சியில் சிலர் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணி உறுதியாகி 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இதனிடையே, காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தன்னை சந்தித்ததாக த.வெ.க. தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதர் அர்ஜுனா பேசியிருந்தார்.

இதனை தொடர்ந்து, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் டி.செல்வத்தை அப்பதவியில் இருந்து நேற்று சஸ்பெண்ட் செய்து கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.செல்வம் விஜய் முன்னிலையில் இன்று தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று பிற்பகல் 3 மணிக்கு பனையூரில் உள்ள த.வெ.க.வின் அலுவலகத்தில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட டி.செல்வம் த.வெ.க.வில் இணைய உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com