ஏ.ஆர். ரகுமான் உடல்நிலை எப்படி இருக்கு? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அப்டேட்

மருத்துவர்களைத் தொடர்புகொண்டு ஏ.ஆர்.ரகுமானின் உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன் என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். ரகுமான் உடல்நிலை எப்படி இருக்கு? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அப்டேட்
Published on

சென்னை:

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

இந்த நிலையில், ஏ.ஆர். ரகுமான் உடல் நலன் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!

அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி! என்று கூறியுள்ளார்.

இதனிடையே, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன் என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com