

தஞ்சாவூரில் தி.மு.க. எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனின் இல்லத் திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
* யாரும் சோகமாக இருக்கத் தேவையில்லை. நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம்.
* தமிழகத்தில் இன்றும் ஆட்சியில் இருப்பது திராவிட முன்னேற்றக்கழகம் தான்.
* திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தான் தற்போதைய அரசு நிறைவேற்றுகிறது.
* தி.மு.க. கொண்டுவந்த திட்டங்கள் அமலில் இருக்கும் வரை திராவிட முன்னேற்றக்கழகம் தான் தமிழகத்தை ஆள்கிறது.
* எந்த பணியையும் செய்யாமல் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறது.
* சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலமாக தான் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது என்றார்.