திமுக வேட்பாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கிருஷ்ணகிரி, சேலம், தென்காசி மாவட்டங்களில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களை முதலமைச்சர் சந்தித்தார்.
திமுக வேட்பாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

தமிழகத்தில் கடந்த 23-ந்தேதி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 4-ந்தேதி எண்ணப்படுகிறது. சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப்போட்டி நிலவியது.

நேற்று முன்தினம் வாக்குப்பதிவுக்கு பிந்தையை கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதே நேரம் அதிமுகவுக்கு கணிசமான இடங்களும், தவெக இரட்டை இலக்க தொகுதிகளை பெறும் என அந்த முடிவுகள் கூறுகின்றன.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

கிருஷ்ணகிரி, சேலம், தென்காசி மாவட்டங்களில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களை சந்தித்த முதலமைச்சர், அந்த மாவட்டங்களின் கள நிலவரம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com