TN Assembly Election | பாக முகவர்கள் விழிப்போடு பணியாற்ற வேண்டும் - முதலமைச்சர் அறிவுறுத்தல்

தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடி தி.மு.க. பாக முகவர்களுடன் காணொளியில் ஆலோசனை மேற்கொண்டார்.
TN Assembly Election | பாக முகவர்கள் விழிப்போடு பணியாற்ற வேண்டும்  - முதலமைச்சர் அறிவுறுத்தல்
Published on

தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறுவதை ஒட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.

இன்று சென்னையில் காலையில் நடைபயிற்சி சென்றபோது பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அதன் பிறகு வீட்டுக்கு சென்ற அவர் தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடி தி.மு.க. பாக முகவர்களுடன் காணொளியில் ஆலோசனை மேற்கொண்டார்.

சுமார் 75 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த ஆலோசனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாக்குச் சாவடி பணிகள் உள்ளிட்டவை குறித்து பாக முகவர்களுக்கு அறிவுறுத்தினார்.

தேர்தலின்போது விழிப்போடு பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்தும், ஒவ்வொரு வாக்கும் முக்கியம் எனவும் வலியுறுத்தினார்.

பாக முகவர்கள் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்தும் அதில் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com