திமுக வேட்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தி.மு.க., அ.தி.மு.க. நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவியது.
திமுக வேட்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Published on

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் இதுவரை இல்லாத உச்சபட்ச அளவாக 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவியது.

இந்நிலையில் அறிவாலயத்தில் சென்னை மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களின் திமுக வேட்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், நாசர், எபினேசர், மயிலை த.வேலு, காஞ்சிபுரம் சுந்தர் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

மே 4 வாக்கு எண்ணிக்கையின்போது திமுக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு பணி குறித்து முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com