ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!

ஆவின் பால் விநியோகம் குறைந்துள்ள நிலையில், கொள்முதலை அதிகரிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!
Published on

ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தனியாருக்கு இணையாக ஆவின் நிறுவனத்தை உருவாக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்றும் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சர்கள், அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

பால் கொள்முதல் விலையை அதிகரிப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் 2026-27ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் இம்மாத இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அறிக்கையில் இடம்பெறவுள்ள முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை இறுதி செய்வதற்காக, துறைவாரியாக முதலமைச்சர் விஜய் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார்.

ஒவ்வொரு துறையின் தற்போதைய செயல்பாடுகள், புதிய திட்டங்கள், அரசின் இலக்குகள், சேவை வழங்குதலில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றங்கள், வெளிப்படைத்தன்மை, நிர்வாகச் செயல்திறன் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படுகின்றன.

இதன் ஒருபகுதியாக பால்வளத்துறை தொடர்பாக ஆவின் பால் உற்பத்தி குறைவு, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com