

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், இன்று தனது சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து தனது இருக்கையில் அமர்ந்த முதலமைச்சருக்கு அமைச்சர் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
தேர்தலுக்கு பின்னர் முதல்முறையாக தனது சொந்த தொகுதிக்கு வந்த முதலமைச்சர் விஜய், அலுவலக கட்டடத்தை திறந்ததோடு, அலுவலகத்தின் வளாகத்திலேயே இருந்த இ-சேவை மையத்தையும் திறந்துவைத்தார்.
இதனைத்தொடர்ந்து தனது சொந்த தொகுதி மக்களுக்கென பிரத்யேகமாக தொடங்கப்பட்ட செல்போன் செயலிலையும் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்துகிறார்.
நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், இரண்டிலும் வெற்றிப்பெற, திருச்சி கிழக்கு தொகுதிக்கான எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.