சென்னை- புறநகர் பகுதியில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

ஆங்காங்கே இடியுடன் கூடிய மின்னல் மற்றும் திடீர் பலத்த காற்று வீசுவதற்கு வாய்ப்பு.
Chennai rain
Published on

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழையால் வெப்பம் தணிந்தது. நீண்ட நாட்களாக வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சென்னை வாசிகளுக்கு இது மகிழ்ச்சியை தந்தது.

இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாதகமான வெப்ப சலனம் மேகமூட்டங்கள் உருவாகியுள்ளன. கிழக்கு-மேற்கு திசை மேகப் பரவல் உள்ளன.

மேலும் வட கடலோர தமிழகத்தில் கீழ்மட்ட காற்று குவிகிறது. இதனால் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மின்னல் மற்றும் திடீர் பலத்த காற்று வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது.

வங்காள விரிகுடாவில் இருந்து வரும் ஈரப்பதமான தென்கிழக்கு காற்றும், தமிழ்நாட்டின் உள்நாட்டு பகுதிகளில் இருந்து வரும் தென்மேற்கு காற்றும் குவிவதால் இந்த மழைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com