

மத்திய அரசின் பி.எம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை மேம்படுத்தவும், அதற்கான நிதியைப் பெறவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தங்கள் ஏதுமின்றி கையெழுத்திடுமாறு மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
2020-ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்துவதை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
இத்திட்டத்தில் இணையாத காரணத்தால், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் உள்ள சுமார் ரூ.2,152 கோடி வரையிலான கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இத்திட்டம் மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கி இருந்ததால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எதிர்த்து வந்தது.
தற்போது புதிய அரசு அமையவுள்ளதால் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இத்திட்டத்தை அமல்படுத்தும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.