இனி என்னை திருமதி ஆம்ஸ்ட்ராங் என அழையுங்கள்- பொற்கொடி வேண்டுகோள்

மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.மாநில தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி. ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இனி என்னை திருமதி ஆம்ஸ்ட்ராங் என அழையுங்கள்- பொற்கொடி வேண்டுகோள்
Published on

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது கொலையில் 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி. ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், என்னை பொற்கோடி ஆம்ஸ்ட்ராங் என்ற பெயரை பயன்படுத்தாமல், திருமதி ஆம்ஸ்ட்ராங் என்று பயன்படுத்துங்கள் என்று ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கின் பெயரை நினைவூட்டவே இது போன்று மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com