

தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது ம.ஜ.க.வின் தமிமுன் அன்சாரி உரையாற்றினார்.
அப்போது அவர்," 4 நாட்களில் பல நல்ல விஷயங்களை முதலமைச்சர் விஜய் செய்துள்ளார்.
முதலமைச்சரின் நம்பிக்கையை அரசுமயமாக்குவதை கண்டிக்கிறேன்.
முதலமைச்சரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் நியமனம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது" என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர் நித்தியானந்தன்,"தீயசக்தி எனக்கூறிய கட்சிகளின் ஆதரவை முதலமைச்சர் பெற்றுள்ளார். தமிழ்நாடு என்பது அரசியல் மேடை கிடையாது.
வெறும் உணர்ச்சி அரசியலுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. த.வெ.க. ஆட்சியின் நிலையற்ற தன்மையின் காரணமா எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.
தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது ம.ம.க.வின் ஜவாஹிருல்லா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்த்தாய் வாழ்த்து அரசு விழாக்களில் முதலிடம் பெற வேண்டும்.
த.வெ.க. அரசு சமூக நீதியை காக்க வேண்டும்.
பி.எம்.ஸ்ரீ திட்டத்தை த.வெ.க. அரசு ஏற்கக்கூடாது.
அடுத்து அறிவிக்கம் அமைச்சர்களில் ஒரு இஸ்லாமியருக்காவது அமைச்சர் பதவி வழங்க வேண்டும்.
முன்னணி மாநிலமாக திகழும் தமிழ்நாட்டுக்கு நீட் ஒரு தீட்டு என்று எண்ண வேண்டும்.
மத்திய அரசின் வெறுப்பு அரசியலுக்கு எதிராக சமூகநீதி அரசியலை இந்த அரசு வழங்கும் என்ற நம்பிக்கை இல்லை.
வெறுப்பு பேச்சுக்கு தி.மு.க. அரசு இடம் தரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.