என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புதிய கட்சி தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங் மனைவி
    X

    புதிய கட்சி தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங் மனைவி

    • ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
    • கட்சி பெயர், கொடியை அறிமுகம் செய்த பொற்கொடி 32 அடி உயர கம்பத்தில் கொடியேற்றினார்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நினைவேந்தல் சங்கமமாக நடந்தது. தென்னிந்திய புத்தவிகார் தலைவரும் ஆம்ஸ்ட்ராங் மனைவியுமான பொற்கொடி தலைமையில் அமைதிப் பேரணி காலையில் நடந்தது. பொத்தூர் கிராமத்தில் உள்ள வள்ளலார் கோவிலில் இருந்து நினைவிடம் வரை ஊர்வலம் நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் தாயார் கமலா கவாய் மற்றும் புத்த பிட்சுகள் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் சிலை திறப்பு விழா நடந்தது. நினைவேந்தல் மலரும் வெளியிடப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்தநிலையில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற புதிய கட்சியை அறிவித்தார். கட்சி பெயர், கொடியை அறிமுகம் செய்த பொற்கொடி 32 அடி உயர கம்பத்தில் கொடியேற்றினார்.

    யானை தனது துதிக்கையில் பேனாவை பிடித்து எடுத்து செல்வதுபோல் உள்ள நீலம், வெண்மை நிறத்திலான கொடியை அறிமுகப்படுத்தினார்.

    Next Story
    ×