ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு - சிபிஐ விசாரணையை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மனு வாபஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.
ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு - சிபிஐ விசாரணையை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மனு வாபஸ்
Published on

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மனு, தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை எனக் கூறி, அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய திமுக அரசு மேல்முறையீடு செய்தது. தமிழ்நாடு காவல்துறை ஏற்கனவே விரிவான விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என அப்போதைய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இதனையடுத்து தற்போதைய அரசின் நிலைப்பாடு குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றுள்ளது தவெக அரசு.

X

Maalai Malar
www.maalaimalar.com