ஆம்ஸ்ட்ராங் வழக்கு: வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை- பார் கவுன்சில் அதிரடி

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிஹரன் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் வழக்கு: வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை- பார் கவுன்சில் அதிரடி
Published on: 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரபல ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதித்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிஹரன் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கு முடியும் வரை 4 பேருக்கும் தடை விதித்து தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com