தி.மு.க. எம்.பி, அமைச்சர் இடையே கடும் வாக்குவாதம் - ராமநாதபுரத்தில் பரபரப்பு

அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க. எம்.பி, அமைச்சர் இடையே கடும் வாக்குவாதம் - ராமநாதபுரத்தில் பரபரப்பு
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி.க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நவாஸ் கனி எம்.பி. விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த போது, அவர் வருவதற்கு முன்பாகவே விழா தொடங்கப்பட்டதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த நவாஸ் கனி எம்.பி., இது குறித்து கலெக்டரிடம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கலெக்டர் விஷ்ணு சந்திரன் தள்ளிவிடப்பட்டார். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com