திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலின் முயன்றதாக விஷம பிரசாரம் செய்வதா? - அப்பாவு கண்டனம்

த.வெ.க ஆட்சி அமைப்பதற்கு தி.மு.க. முட்டுக்கட்டை போடாது என்று சொன்ன வார்த்தையை தி.மு.க. தலைவர் இன்றளவும் கடைபிடித்து வருகிறார்.
Appavu
Published on

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என்று திட்டமிட்டு சிலர் பிரசாரம் செய்து வருகிறார்கள் என்று அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சபாநாயகர் அப்பாவு எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க தி.மு.க. தலைவர் முயற்சி செய்கிறார் என்று திட்டமிட்டு சிலர் விஷம பிரசாரத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள். தேர்தல் முடிவுகள் வந்த மறுகணமே நாங்கள் எதிர்கட்சியாக செயல்படுவோம், த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு தி.மு.க. முட்டுக்கட்டை போடாது என்று சொன்ன வார்த்தையை தி.மு.க. தலைவர் இன்றளவும் கடைபிடித்து வருகிறார். ஆனால் நடந்த உண்மை தேர்தல் முடிவுகள் வந்த நாள் இரவே அ.தி.மு.க.வின் ஆதரவை த.வெ.க கோரியதாகவும் அதற்கு எடப்பாடி பழனிசாமி சில நிபந்தனைகள் விதித்ததாகவும் அதனை ஏற்காத த.வெ.க. ஆத்திரத்தில், அ.தி.மு.க.வை உடைத்து சின்னா பின்னமாக்கி வருவதாகவும் சமூக வலைதளங்களிலும் பொது வெளியிலும் பேசப்பட்டு வருகிறது.

இந்த உண்மைகளை ஒட்டுமொத்தமாக மறைத்து விட்டு தமிழக முதலமைச்சர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கல்லாப்பெட்டி எம்.எல்.ஏ.க்கள், அ.ம.மு.க. எம்.எல்.ஏ., தற்போது ஆதரவு கொடுத்துவரும் கட்சி எம்.எல்.ஏக்கள், வைகோவின் பத்திரிகை வாக்குமூலம் மற்றும் தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்களை ராஜினாமா செய்ய சொல்லி கட்சியில் சேர்த்து கொண்டிருப்பது வரை த‌.வெ.க குதிரை பேரங்களை தொடர்ந்து செய்து வருகிறது.

சிபிஐ விசாரணை

இத்தொடர் குற்றங்களை விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, கரூரில் 41-பேர் இறந்ததற்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டதுபோல், இதற்கும் சி.எம். சார் சி.பி.ஐ. விசாரணை கேட்பீர்களா ? அல்லது தமிழக காவல்துறையை ஏவி எதிர்கட்சிகளை மிரட்டுவீர்களா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com