என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பச்சைப் பொய் சொல்கிறார்: அண்ணாமலை
    X

    பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பச்சைப் பொய் சொல்கிறார்: அண்ணாமலை

    • விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகி திருவக்கரை பாஸ்கரன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய 2 தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சென்னை:

    இந்தியாவிலேயே தமிழகம்தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை காட்சிப்படுத்தியும், பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு பாலியல் குற்ற சம்பவங்களை தொகுத்தும் அண்ணாமலை பரபரப்பு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

    அதில், இந்திய பல்கலை கழகங்களில் தலைசிறந்த அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தி.மு.க.வை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகி திருவக்கரை பாஸ்கரன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. நிர்வாகி முருகேசன் என்பவர் 14 வயது சிறுமியை உறவினர் வீட்டில் கொண்டு விடுவதாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய 2 தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்து வரும் தி.மு.க. பிரமுகர், தூத்துக்குடி அருகே தாய், மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வரும் தி.மு.க. நிர்வாகி, விருத்தாசலத்தில் 5 வயது குழந்தையை பாலியல் சித்ரவதை செய்த தி.மு.க. கவுன்சிலர், கரூரில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி இளம் பெண்ணை பாலியல் கொடுமை செய்த தி.மு.க. பொறியாளர் அணி நிர்வாகி, கோவையில் கணவரை பிரிந்த பெண்ணை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகி, விருதுநகரில் இளம் பெண்ணை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்தவர்கள், தஞ்சை ஒரத்தநாட்டில் கஞ்சா போதையில் தி.மு.க.வினர் 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது, ராணிப்பேட்டையில் பாலியல் தொல்லை கொடுப்பதாக 2 இளம்பெண்கள் புகார் செய்தது.

    இத்தனை பாலியல் குற்றங்களில் தி.மு.க. நிர்வாகிகள் பிடிபட்ட பின்னரும் தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது பச்சை பொய்யின்றி வேறென்ன?

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.



    Next Story
    ×