ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்ட அஞ்சலை மீது மேலும் ஒரு வழக்கு- நீதிமன்ற காவலுக்கு உத்தரவு

திருநங்கைகளிடம் ரூ.23 லட்சம் பணம் கொடுத்து, ரூ.43 லட்சம் வரை வசூல்.நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்ட அஞ்சலை மீது மேலும் ஒரு வழக்கு- நீதிமன்ற காவலுக்கு உத்தரவு
Published on

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஞ்சலை மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கந்துவட்டி புகாரில் அஞ்சலை கைது செய்யப்பட்டார்.

அஞ்சலையின் மருமகன், டாட்டூ மணி, கொடுத்த புகாரின் பேரில், பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

திருநங்கைகளிடம் ரூ.23 லட்சம் பணம் கொடுத்து, ரூ.43 லட்சம் வரை வசூல் செய்த வழக்கில் அஞ்சலை கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கந்துவட்டி வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அஞ்சலைக்கு வரும் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com