மிருகங்கள் உலா வருகின்றன.. பெண் பிள்ளைகளை பெற்றோர் கண்காணித்து வளர்க்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்

தமிழ்நாட்டில் இரண்டு சம்பவங்கள் மனதை உலுக்கியது.
மிருகங்கள் உலா வருகின்றன.. பெண் பிள்ளைகளை பெற்றோர்  கண்காணித்து வளர்க்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
Published on

கோவை சிறுமி வன்கொடுமை சம்பவத்திற்கும், திருச்சி பயிற்சி மாணவி உயிரிழப்பு சம்பவத்திற்கும் போர்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இரண்டு சம்பவங்கள் மனதை உலுக்கியது.

திருச்சியில் அரசு மருத்துவமனையில் ஒரு செவிலியர் மாணவி தவறான சிகிச்சையால் உயிரிழந்திருப்பது மிக மிக மனதை உலுக்குவதாக இருந்தது.

அரசு மருத்துவமனைகள் அனைவருடைய நம்பிக்கையுடைய மருத்துவமனைகளாக வாழ வேண்டும். அதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக மனதை உலுக்கியது கோவையில் 10 வயது மாணவியின் மரணம். இது யாராலும் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. அரசாங்கத்திற்கும் ஒரு கோரிக்கை வைக்கின்றேன்.

தாய்மார்களுக்கும் ஒரு கோரிக்கையை வைக்கின்றேன். அரசாங்கம் சிக்கப் பெண்கள் படை உருவாக்கினார்கள். ஆனால், சிங்கப்பெண்கள் வளர்கின்ற சிங்கப்பெண்களை காப்பாற்ற தவிக்கிறார்களே.. என்கிற எண்ணம் மேலோங்குகிறது.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனே தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மிருகங்கள் உலா வருகின்றன.. பெற்றோர் பெண் பிள்ளைகளை கண்டித்து வளர்ப்பதை விட கண்காணித்து வளர்க்க வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com