அமோனியா கசிவு விவகாரம்- தொழிற்சாலையில் மின்சாரத்தை துண்டித்து ‘சீல்’ வைப்பு

11 பேர் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Factory seal
Published on

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப் பேரில் உள்ள கடல் உணவு பொருள்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் தொழிற்சாலையில் கடந்த மாதம் 21ம் தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.

இதில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த வட மாநில பெண் தொழிலாளர்கள் 18 பேர் பலியானார்கள். மேலும், 11 பேர் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து தொழிற்சாலை உரிமையாளர்கள், மேலாளர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும், தொழிற்சாலையில் இருந்த 400 டன் கடல் உணவுப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு கடந்த 4 நாட்களாக நிறுவனத்தில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த சுமார் 6 டன் அமோனியா வாயு பலத்த பாதுகாப்புடன் டேங்கர் லாரிக்கு மாற்றப்பட்டு ெசன்னையில் உள்ள சி.பி.சி.எல்.நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் கவிதாவின் உத்தரவின்படி வருவாய்த் துறையினர், தொழில் துறை யினர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள் ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் திருவள்ளூர் கோட்டாட்சியர் ரவிச்சந்தி ரன் தலைமையில் தொழிற் சாலையில் உள்ள அலுவல கம், குடோன், தளவாடங்கள் உள்ள அறை, குடியிருப்பு உள்ளிட்ட 5 பகுதிகளில் நேற்று மாலை பூட்டி சீல் வைத்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com