த.வெ.க. அரசு தொடர ஆதரவு- முதலமைச்சரை புகழ்ந்து பேசிய அமமுக MLA காமராஜ்

புதிதாக தேர்வு செய்யப்பட்ட சபாநாயகருக்கு எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
த.வெ.க. அரசு தொடர ஆதரவு- முதலமைச்சரை புகழ்ந்து பேசிய அமமுக MLA காமராஜ்
Published on

தமிழ்நாடு சட்டசபையில் 2-ம் நாள் அமர்வு இன்று கூடியது. அப்போது சட்டசபையில் சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் பதவியேற்றுக்கொண்டார். துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.

சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி. பிரபாகரை, அவை முன்னவர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இருக்கையில் அமரவைத்தனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட சபாநாயகருக்கு எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜ் பேசியதாவது:-

* அரசியல் சூழல் காரணமாக சில கசப்பான விஷயங்கள் நடந்தன.

* தமிழக இளைஞர்கள், நாங்களும் உங்களை நம்புகிறோம்.

* த.வெ.க. ஆட்சி 5 ஆண்டு காலம் தொடர வேண்டும், இளைஞர்கள் அதிகளவில் சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ளனர்.

* முதலமைச்சர் கையெழுத்திட்ட 3 திட்டங்களும் வரவேற்கத்தக்கது.

* த.வெ.க. தலைமையிலான அரசுக்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com