இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலிலும் தவெகவுடனான கூட்டணித் தொடரும் - அமைச்சர் ஷாஜஹான்

தவெக உடனான ஐயூஎம்எல் கூட்டணி இடைத்தேர்தல்களிலும், உள்ளாட்சித் தேர்தல்களிலும் தொடரும்.
இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலிலும் தவெகவுடனான கூட்டணித் தொடரும் - அமைச்சர் ஷாஜஹான்
Published on

234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைப்பெற்றது. இதில் நான்குமுனைப் போட்டி நிலவியது. திமுக தலைமையிலான அணி, அதிமுக தலைமையிலான அணி, நாம் தமிழர், தவெக என நான்குமுனைப் போட்டி நிலவியது.

இதில் திமுக அணியில் இடதுசாரிகள், ஐயூஎம்எல், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விசிக, மதிமுக உள்ளிட்டக் கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியாக திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பலக் கட்சிகள் தவெக பக்கம் சென்றன. தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்தன. ஆனால் கூட்டணி குறித்தும், தேர்தலில் தவெக உடன் இணைந்து போட்டியிடுவது குறித்தும் தெளிவான முடிவை பல கட்சிகளும் எடுக்கவில்லை.

இந்நிலையில் தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ஐயூஎம்எல் தவெகவுடன் இணைந்தே போட்டியிடும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com