நிர்பந்தம் காரணமாகவே பா.ஜ.க.வுடன் கூட்டணி - அழுத அ.தி.மு.க. நிர்வாகி

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது.இஸ்லாமியர்களுடன் அ.தி.மு.க. துணை நிற்கும்.
நிர்பந்தம் காரணமாகவே பா.ஜ.க.வுடன் கூட்டணி - அழுத அ.தி.மு.க. நிர்வாகி
Published on

தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் கூறியதாவது:

* பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது.

* இஸ்லாமியர்கள் யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம் என்று அவர் கூறினார்.

கூட்டத்தில் பேசிய திருப்பூர் மாமன்ற எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் கூறுகையில், நிர்பந்தம் காரணமாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களுடன் அ.தி.மு.க. துணை நிற்கும் என்று அவர் நாதழுதழுக்க பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com