திருவள்ளூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

போட்டியை கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர். திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டி, ஜெ.என் சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார், திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி டீன் சரஸ்வதி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜவஹர்லால், சுகாதாரத்துறை துணை இயக்குனர் சேகர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் மருத்துவர் கவுரிசங்கர் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com