

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட முக்குலத்தோர் புலிப்படைக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, கருணாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
உதயசூரிய சின்னத்தில் போட்டியிட உள்ளோம், எந்த தொகுதியில் போட்டி என்பது குறித்து நாளை தெரிவிக்கப்படும்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது, முழுவதும் வாஷ் அவுட் ஆகும்.
ஜெயலலிதா இருந்த காலத்தில் 2016 தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுள்ளேன்.
மற்ற கட்சிகளின் வாக்குகளை வாங்கிக்கொண்டு கடைசியாக மோடி, அமித்ஷா, தாமரை வாக்கு என பாஜக ஸ்டிக்கர் ஒட்டுகிறது.
எந்த கூட்டணியில் இருந்தாலும் பாஜகவின் தாமரை சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்காதீர்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.