என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அதிமுக - பாஜக Pressure கூட்டணி அல்ல, Pleasure கூட்டணி... விமர்சனங்களுக்கு தமிழிசை விளக்கம்
- அ.தி.மு.க.வை அடக்கி விட்டது பா.ஜ.க. என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
- மகிழ்ச்சியோடு உருவானது அதிமுக - பாஜக கூட்டணி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பாஜக கூட்டணியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கே சிக்கல் வரும். இதனால் பாஜக கூட்டணிக்கு எடப்பாடி ஒத்துக்கொண்டுள்ளார். அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கி விட்டது பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது பா.ஜ.க., அவர்களின் அடக்குமுறைக்கு எடப்பாடி பழனிசாமி பணிந்து விட்டார்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, முதலமைச்சரின் விமர்சனத்துக்கு பதில் கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "அதிமுகவை பாஜக மிரட்டிப் பணிய வைத்துள்ளது என்று ஸ்டாலின் கூறுகிறார். எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை. மகிழ்ச்சியோடு உருவானது எங்கள் கூட்டணி. எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயம் இல்லை" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பேசிய தமிழிசை, "போராட்டங்கள் ஒருபக்கம் நடக்கிறது, ஆனால் முதலமைச்சர் பாராட்டு மழையில் நனைந்து கொண்டு இருக்கிறார். Pressure கொடுத்து கூட்டணி வைத்ததாக சொல்கிறார்கள், ஆனால் அதிமுக - பாஜக கூட்டணியானது Pleasure" என்று தெரிவித்தார்.
மேலும், எந்த அழுத்தத்தின் காரணமாக காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி வைத்தது? என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.






