வருகிற 1-ந்தேதி அ.தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம் - எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

இக்கூட்டத்தில் மூத்த தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
Edappadi Palaniswami
Published on

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மகளிர் அணியின் செயல்பாடுகள் குறித்தும்; கழக வளர்ச்சிப் பணிகளில் மகளிரின் பங்கு குறித்தும், ``கழக மகளிர் அணி மாநில நிர்வாகிகள், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்கள், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்டக் கழக இணைச் செயலாளர், மாவட்டக் கழக துணைச் செயலாளர், தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் கழக செய்தித் தொடர்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகத்தில் வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளார். இக்கூட்டத்தில் மூத்த தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். ஆகவே, மேற்கண்ட பொறுப்புகளில் பணியாற்றி வரும் மகளிர் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com