சி.வி.சண்முகம் தலைமையில் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை! அ.தி.மு.க.வில் அடுத்து நிகழப்போவது என்ன?

சி.வி.சண்முகம் தலைமயிலான அ.தி.மு.க.வினரை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சி.வி.சண்முகம் தலைமையில் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை! அ.தி.மு.க.வில் அடுத்து நிகழப்போவது என்ன?
Published on

2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவிற்கு பிறகு அதாவது கடந்த ஒருவார காலமாக தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. தேர்தல் முடிவில் தனிப்பெரும்பான்மை பெற்றும் ஆட்சி அமைப்பதில் த.வெ.க. சந்தித்த தடைகள் பல. அவைகளை மீறி நேற்று முன்தினம் கோலாகலமாக த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

இதையடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை C.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

இதுபுறம் இருக்க, அ.தி.மு.க. இரு அணியாக பிரிந்துள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் என அணிகள் பிரிந்து கடைசியாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கே அ.தி.மு.க. என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதையடுத்து தற்போது, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம் தலைமையிலான 24 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இவர்கள் இன்று காலை செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழக வெற்றிக்கழகத்தை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளதாகவும், தி.மு.க. ஆதரவோடு ஆட்சியமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரும்பியதாகவும் தெரிவித்தனர்.

இதனை அ.தி.மு.க. தலைமை கழகம் கண்டித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, சி.வி.சண்முகம் தலைமயிலான அ.தி.மு.க.வினரை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சட்டசபையின் 2-ம் நாள் அமர்வு முடிந்தவுடன் சபாநாயகரை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், சி.வி.சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளனர். இதன்பின் அரசியலில் எவ்விதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

X

Maalai Malar
www.maalaimalar.com