இனி நமக்குள் பிரிவில்லை... இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை... அதிமுக

கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!
அதிமுக
Published on

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி- சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சுமூகமுடிவு எட்டப்பட்டதாகவும் இதனால் இரு அணிகளும் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகின.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

" எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும்” - அம்மா

கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!

இனி நமக்குள் பிரிவில்லை...

இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..

​நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே!

நாளை நமதே!

தமிழ்நாடும் நமதே! என்று கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com