முதலமைச்சர் விஜயை இன்று மாலை சந்திக்கும் சி.வி.சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க. அணி

எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியதோடு, நான்தான் அதிமுக சட்டமன்ற தலைவர் என்றும் உறுதியாக இருக்கிறார்.
முதலமைச்சர் விஜயை இன்று மாலை சந்திக்கும் சி.வி.சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க. அணி
Published on

சென்னை:

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் புதிதாக களம் இறங்கிய தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை பிடித்து முதலமைச்சராக விஜய் பதவியேற்று விட்டார்.

இந்த தேர்தலில் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தோடு களமிறங்கிய அ.தி.மு.க. 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதுமட்டுமின்றி அந்த கட்சி 3-வது இடத்தை பிடித்ததால் எதிர்க்கட்சிஅந்தஸ்தையும் சட்டசபையில் இழந்தது. இந்த தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அக்கட்சியினர் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி சட்டசபை தலைவராகவும் எஸ்.பி.வேலுமணியை நியமிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியதோடு, நான்தான் அதிமுக சட்டமன்ற தலைவர் என்றும் உறுதியாக இருக்கிறார். அவருக்கு சில மாவட்ட செயலாளர்களும் ஆதரவு தெரிவிக்கினறனர். ஆனால் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பினர் அதனை ஏற்க மறுத்து இருக்கின்றனர்.

இதனிடையே, சி.வி.சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலை முதலமைச்சர் விஜயை சந்திக்க உள்ளனர். சி.வி.சண்முகம் தலைமையில் எஸ்.பி.வேலுமணி உள்பட 24 எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் விஜயை சந்தித்து த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com