அமைச்சரவையில் இடம் கொடுத்தவர்களுக்கும், அமைச்சரானவர்களுக்கும் வெட்கமில்லை - ஆ.ராசா

இரவு முழுவதும் மனப்பாடம் செய்து பேப்பரை பார்த்து அப்படியே சட்டமன்றத்தில் படிக்கிறார் முதல்வர்.
A Raja
Published on

சென்னை சைதாப்பேட்டையில் நீட் தேர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக எம்பி ஆ.ராசா பேசியதாவது:

* எல்லாத்துக்கும் ஸ்டாலின் சார் என கூறும் முதல்வருக்கு ஒரு வார்த்தை மத்திய அரசை எதிர்த்து பேச தைரியம் இருக்கிறதா?

* இந்தி திணிப்பை ஒப்புக்கொள்ள மாட்டோம் என ஆளுநர் உரையில் கூறிய நிலையில், சிபிஎஸ்இ, இந்தி திணிப்பை எதிர்த்து பேச துணிவு உள்ளதா?

* இரவு முழுவதும் மனப்பாடம் செய்து பேப்பரை பார்த்து அப்படியே சட்டமன்றத்தில் படிக்கிறார் முதல்வர்.

* திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி கொடுத்து ஆட்சி அமைத்துள்ளீர்கள். அமைச்சரவையில் இடம் கொடுத்தவர்களுக்கும் வெட்கமில்லை, அமைச்சரானவர்களுக்கும் வெட்கமில்லை.

* திமுக தயவில் ஆட்சியமைத்துவிட்டு, மற்ற கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடமளித்தோம் என்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com