

தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 2 நாட்களாக ரிகர்சல் பார்த்தவற்றை நடித்து விட்டு சென்றுள்ளார் முதலமைச்சர் விஜய்.
* ரிகர்செல் செய்து வந்த முதலமைச்சர் விஜய் ஆக்சன் என்று சொன்னவுடன் நடித்து காட்டி உள்ளார்.
* டயலாக்கை மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறார் முதலமைச்சர்.
* ஆடியோ, டிரெய்லர் லாஞ்ச் போல் சட்டசபையில் பேசி உள்ளார் முதலமைச்சர்.
* நான் முதல்வன், பயிர்க்கடன், 6 சிலிண்டர், மகளிர் உரிமை தொகை என எதைப்பற்றியும் முதல்வர் பதில் கூறவில்லை.
* முழுக்க முழுக்க சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் வகையில் முதலமைச்சர் பேசுகிறார்.
* சட்டப்பேரவையிலும் முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிக்கிறார்.
* சபாநாயகர் இயக்குநராக இருக்கும் நிலையில் பேரவை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறுகிறது.
* எந்த பார்ட்டி, யார் யாருக்கு பார்ட்டி ஃபண்ட் கொடுத்தார்கள் என ஆதாரம் உள்ளதா?
* அதிமுகவின் ஒரு பிரிவினரை மட்டும் முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்தித்தது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.