

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றிபெற்றுள்ளது.
இதைதொடர்ந்து, முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நம்பிக்கைத் தீர்மானத்தை வெற்றிபெற செய்த அனைவருக்கும் நன்றி.
மக்கள் விரும்பும் அணியாக தேர்தலில் களம்கண்டோம். எந்த அணியும் இல்லாமல் தனியாக களமிறங்கினோம்.
சாமானிய மக்களின் அரசாக தவெக செயல்படும். ஒரு விரல் புரட்சி விசில் புரட்சியானது.
சிறுபான்மை அரசு என விமர்சித்தால் மகிழ்ச்சியே.நாங்களே சொல்கிறோம் இது சிறுபான்மை அரசு தான். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரசு.
எம்மதமும் நம் மதமே. இது சாமானியர்களுக்கான சாதி, மதம் கடந்த அரசு.
பாகுபாடு காட்டாத பண்பட்ட அரசு இது. துணிச்சலாக பணியாற்றுவதே முக்கியம்.
அதிகாரம் காட்டும் அரசு அல்ல, அனைவரையும் அரவணைக்கும் அரசு. யாரையும் வெறுக்கும் அரசு அல்ல, அனைவரையும் விரும்பும் அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.