

சென்னை ராயபுரத்தில் அரசு மருத்துவமனையின் வாசலில் பெண் குழந்தையை கடத்திய சம்பவம் அதிகரித்து வருகிறது.
பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கடத்திச் சென்ற பெண் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த கீதாவிற்கு பிறந்த பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது.
பிரசவம் முடிந்து தாய் வீட்டிற்கு செல்ல கையில் குழந்தையுடன் ஆட்டோ தேடிய தாய் கீதா.
குழந்தையை தம்மிடம் கொடுத்துவிட்டு ஆட்டோ தேடுமாறு கூறிய பெண் கடத்தி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில அடி தூரம் நடந்து சென்று ஆட்டோ தேடிவிட்டு திரும்பி வந்த தாய்க்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
அரசு மருத்துவமனை வாசலில் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.