

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் கூடியது. கூட்டம் கூடியதும் முதலமைச்சர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார்.
இதனை தொடர்ந்து முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் ராஜேஷ்குமார் பேசியதாவது, தமிழக வெற்றிக்கழக அரசுக்கு காங்கிரசின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும், வெறுப்பு அரசியல், மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு, 200 யூனிட் இலவச மின்சாரம், மதுபானக்கடைகளை மூடும் உத்தரவுக்கு காங்கிரஸ் வரவேற்கிறது. என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.