ரூ.3,214 கோடி செலவில் மேலும் 34 துணை மின் நிலையங்கள் - மின் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை

சென்னையின் மின்சார தேவை, முந்தைய உச்சபட்ச அளவான 5 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியதால், நகரின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
துணை மின் நிலையங்கள்
Published on

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் தட்டுப்பாட்டை தீர்க்க மேலும் 34 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

மின் தடை

இந்த ஆண்டு முதன் முறையாக சென்னையின் மின்சார தேவை, முந்தைய உச்சபட்ச அளவான 5 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியதால், நகரின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது. சமீபத்தில் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், பழைய துணைமின் நிலையங்களுக்கு பதிலாக 230 கிலோவோல்ட், அத்துடன் 110 மற்றும் 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களை புதியதாக அமைத்து செயல்பாட்டுக்கு கொண்டுவர தவறியதே மின் தடைகளுக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த மின்சார இருப்பு போதுமானதாக இருந்தபோதிலும் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்பட்ட தடைகள் டிரான்ஸ் பார்மர்களில் ஏற்படும் ஓவர்லோடு, பழுதடைந்த உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அமைந்தது.

4 மாவட்டங்கள்

இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மின்வாரியம் சென்னை, புறநகரில் 34 துணை மின் நிலையங்களை நிறுவ மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு கொள்ளளவு கொண்ட 34 துணை மின் நிலையங்களை இந்த நிதியாண்டிற்குள் ரூ.3,214 கோடி செலவில் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதில் வடக்கு வட்டத்தில் மொத்தம் 13 துணை மின் நிலையங்களும், தெற்கு வட்டத்தில் 21 துணை மின் நிலையங்களும் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com