search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண வரவேற்பு விழா: எடப்பாடி பழனிசாமி இன்று கோவை வருகை
    X

    எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண வரவேற்பு விழா: எடப்பாடி பழனிசாமி இன்று கோவை வருகை

    • கோவைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க கோவை மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.கவினர் தயாராகி வருகிறார்கள்.
    • மாவட்டத்தின் எல்லையில் இருந்து, திருமண மண்டபம் வரைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்.

    கோவை:

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரரும், கோவை நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன்-ஹேமலதா தம்பதியின் மகன் டாக்டர் ஏ.எல்.விவேக், என்.ரவிசங்கர், ஆர்.சாந்தி தம்பதியின் மகள் டாக்டர் ஆர்.வைஷ்ணவி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று கோவையில் நடக்கிறது.

    கோவை ஈச்சனாரி செல்வம் மஹாலில் மாலை 6 மணியளவில் இந்த வரவேற்பு நிகழ்ச்சியானது நடக்கிறது.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்த உள்ளார்.

    இதற்காக அவர் சேலத்தில் இருந்து கார் மூலமாக இன்று மாலை கோவைக்கு வருகிறார். கோவை மாவட்ட எல்லையில் அவருக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தொண்டர்கள் திரண்டு வந்து மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    வரவேற்பை ஏற்றுக்கொண்டு, அவர் காரில் ஈச்சனாரி பகுதியில் உள்ள திருமண மண்டபத்திற்கு செல்கிறார்.

    அங்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் எஸ்.பி.அன்பரசன் மற்றும் குடும்பத்தினர் வரவேற்பு அளிக்க உள்ளனர். அதனை தொடர்ந்து அவர், மணமக்களை நேரில் சந்தித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்.

    இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கோவை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் அ.தி.மு.கவினர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக அவர்கள் நேற்று முதலே கோவைக்கு வந்துள்ளனர்.

    இன்று மாலை நடக்கும் விழாவில், அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் பகுதி நிர்வாகிகளும் திரளாக பங்கேற்கின்றனர். அ.தி.முக.வினர் மட்டுமின்றி கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த உள்ளனர்.

    கோவைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க கோவை மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.கவினர் தயாராகி வருகிறார்கள்.

    மாவட்டத்தின் எல்லையில் இருந்து, திருமண மண்டபம் வரைக்கும் அவருக்கு வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×