அரசின் மெத்தன போக்கால் வெள்ள பாதிப்பு... எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தி.மு.க அரசு மழை பாதிப்பு, பிரச்சனைகளை முறையாக கையாளவில்லை.அ.தி.மு.க. ஆட்சியின் போது மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொண்டோம்.
அரசின் மெத்தன போக்கால் வெள்ள பாதிப்பு... எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Published on

சென்னை:

திருவொற்றியூர் பகுதியில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

* அரசின் மெத்தன போக்கால் வெள்ள பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டுள்ளது.

* மக்களுக்கு தேவையான உணவு, பால், தண்ணீர் பெரும்பாலான இடங்களில் கிடைக்கவில்லை.

* தி.மு.க அரசு மழை பாதிப்பு, பிரச்சனைகளை முறையாக கையாளவில்லை.

* ஒரு சொட்டு நீர் கூட தேங்காது என தமிழக அரசு சொன்னது.

* அ.தி.மு.க. ஆட்சியின் போது மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொண்டோம்.

* அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டங்கள் நடத்தி நடவடிக்கைகள் எடுத்தோம்.

* அ.தி.மு.க. ஆட்சியில் வெள்ள நீர் தடுப்பு நடவடிக்கையாக 3 திட்டங்கள் கொண்டு வந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com