ஆலங்குளத்தில் 25-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: பிரேமலதா தலைமையில் நடக்கிறது

ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு வருகிற 28-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு மக்கள் நலனுக்காக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும்.
ஆலங்குளத்தில் 25-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: பிரேமலதா தலைமையில் நடக்கிறது
Published on

சென்னை:

தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலையை கண்டித்தும், அனுமதி பெற்ற அளவைவிட ஆயிரம் மடங்கு மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க கோரியும் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு வருகிற 28-ந் தேதி காலை 11 மணி அளவில் தே.மு.தி.க. சார்பில் கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதில் ஒன்றிய, நகர, பேரூர் கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு மக்கள் நலனுக்காக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com