வானூரில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற 2 லட்சத்து 68 ஆயிரம் பறிமுதல்

சித்தளம்பட்டு மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தயாநிதி மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பறிமுதல் செய்த பணத்தை வானூர் தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேசனிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்த பணத்தை படத்தில் காணலாம்.
பறிமுதல் செய்த பணத்தை படத்தில் காணலாம்.
Published on

வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தளம்பட்டு மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தயாநிதி மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி பறிமுதல் சோதனை செய்தனர். சோதனையில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூபாய் 2 லட்சத்து 68 ஆயிரத்து 500 ஐ பறிமுதல் செய்தனர். விசாரணையில் காரில் வந்தவர் சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மோகன கிருஷ்ணன் என்பது தெரியவந்தது, பறிமுதல் செய்த பணத்தை வானூர் தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேசனிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com