அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பொள்ளாச்சியில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை 5 மணியளவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி என்ற கார்த்திகேயனை ஆதரித்து பேசுகிறார்.
அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பொள்ளாச்சியில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
Published on

பொள்ளாச்சி:

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி நீலகிரி, கோவை பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசாரம் மேற்கொண்டார். நீலகிரி, காரமடை, கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

அதனை தொடர்ந்து இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை 5 மணியளவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி என்ற கார்த்திகேயனை ஆதரித்து பேசுகிறார்.

இதனையொட்டி அங்கு பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்சியினர், பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கை வசதி உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும் அ.தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com