தருமபுரி வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

பிரசார பொதுகூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.முன்னாள் அமைச்சரும் தருமபுரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன், தலைமை வகிக்கிறார்.
தருமபுரி வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்
Published on

தருமபுரி:

தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் அசோகனை ஆதரித்து அ.தி.மு.க. சார்பில் பிரசார பொதுக்கூட்டம் வள்ளலார் திடலில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. இந்த பிரசார பொதுகூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.

இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் தருமபுரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன், தலைமை வகிக்கிறார். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்கிறார்.

முன்னதாக தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளர் கே.பி. அன்பழகன் இந்த பிரசார பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகளை நேற்று நேரில் வந்து பார்வையிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com