

தமிழகத்தில் இருந்து காலியாக உள்ள 6 மேல்சபை எம்.பி. பதவிகளுக்கு வருகிற 26-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இதில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் கடந்த திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க. சார்பில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
அ.தி.மு.க. வேட்பாளர்கள் 3 பேரும் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் சட்டசபை செயலாளர் கி.சீனிவாசனிடம் மனு தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ததும் அவர்களுக்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கே.பி. அன்பழகன், ராஜலட்சுமி மற்றும் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஜி.கே.வாசனுக்கு ஞானதேசிகன், கோவை தங்கம், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.