

புதுச்சேரி:
புதுவை கவர்னராக கிரண்பேடி பதவி ஏற்றது முதல் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவையின் பல்வேறு பகுதிகளுக்கு சைக்கிளில் சென்று தூய்மை பணிகளை ஆய்வு செய்வது வழக்கம்.
அதுபோல் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு கவர்னர் கிரண்பேடி ராஜ்நிவாசில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு லாஸ்பேட்டை என்.சி.சி. மைதானத்துக்கு சென்று துப்புரவு பணியை பார்வையிட்டார்.
நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து புதுவையில் இன்று பந்த் போராட்டம் நடைபெற்றது.
இதனையும் பொருட்படுத்தாமல் கவர்னர் கிரண்பேடி வழக்கம் போல் சைக்கிளில் ஆய்வு மேற்கொண்டார்.
அதே வேளையில் ஆய்வு பணி மேற்கொள்ள சென்ற கவர்னர் கிரண்பேடிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. என்.சி.சி. மாணவர்கள் 8 பேருடன் மட்டுமே சைக்கிளில் சென்ற கவர்னர் கிரண்பேடிக்கு முன்னும், பின்னும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்றனர்.
அதுபோல் கவர்னரை கண்டித்து இன்று நடைபெறும் போராட்டத்தையொட்டி கவர்னர் மாளிகை முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.