கவர்னரின் செயல்பாட்டால் காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது- நாராயணசாமி

காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றிக்கு கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடும் முக்கிய காரணம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி
Published on

புதுவை காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

புதுவை காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதை இந்த வெற்றி வெளிக்காட்டுகிறது.

புதுவை மக்கள் என்றும் மதசார்பற்ற கூட்டணியின் பக்கம் இருக்கிறார்கள் இதனால்தான் கடந்த சட்டமன்ற தேர்தலிலும், அடுத்து நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றோம்.

இப்போது காமராஜர் நகர் தொகுதியிலும் மக்கள் எங்களுக்கு அமோக ஆதரவை அளித்து இருக்கிறார்கள்.

புதுவை மக்கள் எப்போதுமே காங்கிரஸ் பக்கம் இருப்பார்கள் என்பதன் சான்றாக இந்த வெற்றி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த இந்த வெற்றிக்கு கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடும் முக்கிய காரணமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com