

அவர் பயணம் முடிந்து திரும்பிய இரண்டு நாட்களுக்குப் பிறகு பிப்ரவரி 28 தாக்குதல் தொடங்கியது.
பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி 25-26 தேதிகளில் இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டார்.
அவர் பயணம் முடிந்து திரும்பிய இரண்டு நாட்களுக்குப் பிறகு பிப்ரவரி 28, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை தொடங்கின.
இந்தத் தாக்குதல்களுக்கு இந்தியா மறைமுக ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இதுகுறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "பிரதமர் மோடியின் பயணம் முற்றிலும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக மட்டுமே திட்டமிடப்பட்டது. இதற்கும் ராணுவ நடவடிக்கைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை" என்று கூறினார்.
மத்திய கிழக்கில் மோடியின் பயணத்திற்கு முன்பே சூழல் அசாதாரணமாக இருந்தது என்றும், தங்களுக்கு சரியான வாய்ப்பு கிடைத்தபோது மட்டுமே ஈரான் மீதான தாக்குதல்களை நடத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.