விசா நடைமுறையில் இந்தியர்களுக்கு முன்னுரிமை.. ரூபியோ அறிவித்த 'America first' திட்டத்தால் யாருக்கு பலன்?

இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே அமெரிக்காவில் சுமார் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன
விசா நடைமுறையில் இந்தியர்களுக்கு முன்னுரிமை.. ரூபியோ அறிவித்த 'America first'  திட்டத்தால் யாருக்கு பலன்?
Published on

இந்தியாவிற்கு நான்கு நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க தூதரக செயல்பாடுகளை நவீனமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, America First என்ற புதிய Visa Scheduling Tool -ஐ அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்தியப் பயணிகளுக்கு, விசா நேர்காணல் முன்பதிவில் முன்னுரிமை அளிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதன் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விசா முன்பதிவுக்கான முதல் வாய்ப்பு விரைவாக கிடைக்கும்.

இந்த புதிய முறை, வணிகம் மற்றும் முதலீட்டு நோக்கங்களுக்காக அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு பேருதவியாக அமையும்.

அமெரிக்க நிறுவனங்களுடன் புதிய வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்ள விரும்புவோர், தங்களது வணிகச் செயல்பாடுகளை அமெரிக்காவில் விரிவுபடுத்தத் திட்டமிடும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அமெரிக்கச் சந்தைகளில் பெரிய அளவில் முதலீடு செய்ய விரும்பும் இந்தியத் தொழில்முனைவோர் இந்த திட்டத்தின்கீழ் பயனடையலாம்.

இதற்கிடையே, இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே அமெரிக்காவில் சுமார் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன என்பதை ரூபியோ சுட்டிக்காட்டியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com