வங்கத்தில் பா.ஜ.க. தோற்றால் பிரதமர் மோடி பதவி விலகுவாரா?: திரிணாமுல் எம்.பி. கேள்வி

மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து வருகிறது.
வங்கத்தில் பா.ஜ.க. தோற்றால் பிரதமர் மோடி பதவி விலகுவாரா?: திரிணாமுல் எம்.பி. கேள்வி
Published on

மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.யான டெரி ஓ பிரையன் இன்று வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

வங்காளத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் நீங்கள்தான் வேட்பாளர் என்று நீங்களே அறிவித்தீர்கள்.

வீண் பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு, இந்தச் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள்.

மே 4 அன்று மம்தா பானர்ஜியும் திரிணாமுல் காங்கிரசும் வங்காளத்தில் வெற்றி பெற்றுவிட்டால், ​​பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் துணிச்சல் உங்களுக்கு உண்டா? என கேள்வி எழுப்பினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com