ரூ.1.10 லட்சம் பைக் வாங்க 10 ரூபாய் நாணயங்களுடன் ஷோரூம் வந்த இளைஞர் - ஷாக்கான ஊழியர்கள்

10 ரூபாய் நாணயங்களை சாக்குப்பைகளில் கட்டிக்கொண்டு இருசக்கர வாகன ஷோரூமிற்கு வந்தார்.
coins
Published on

தெலுங்கானாவின் நலகொண்டா மாவட்டம் வெளிமினேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கொண்டே ரகுபதி. இவருக்கு நீண்ட நாளாக புதுமையான அதிக திறன் கொண்ட பைக்கை வாங்க விரும்பினார்.

தான் விரும்பும் பைக்குக்கான தொகையை 10 ரூபாய் நாணயமாக வழங்கித்தான் பெறவேண்டும் என முடிவ் செய்தார். இதற்காக மாவட்டம் முழுவதும் அலைந்து, திரிந்து கடைகளிலும் ஓட்டல்கள், பெட்டிக்கடைகள் போன்றவற்றில் 10 ரூபாய் நாணயங்களை அவர் சேகரித்தார்.

அதன்பின், அவற்றை சாக்குப்பைகளில் கட்டிக்கொண்டு இருசக்கர வாகன ஷோரூமிற்கு வந்தார். அங்கு நிர்வாகிகளிடம் விவரத்தைக் கூறியதும் அவர்கள் நாணயங்களை பெற்றுக்கொண்டு, பைக்கை வழங்க சம்மதித்தனர்.

இதையடுத்து, பைகளில் இருந்த 10 ரூபாய் நாணயங்களை தரையில் பரப்பி எண்ணும் பணியில் அந்த ஷோரூம் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பல மணி நேரம் எண்ணப்பட்டு அதில் முழு தொகையான ரூ.1,10,000 இருந்ததை ஏற்றுக்கொண்டு, ஷோரூம் நிர்வாகத்தினர் நவீன வடிவமைப்பு கொண்ட பைக்கை அவரிடம் ஒப்படைத்தனர். அதனை பெற்றுக்கொண்ட அவர் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ரூ.1.10 லட்சம் மதிப்பிலான பைக் வாங்க 10 ரூபாய் நாணயங்களுடன் வந்த ருசிகர சம்பவத்தால் அப்பகுதியில் கலகலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com